×

சென்னை மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பொதுமக்கள் இன்று பயணம் செய்யலாம்!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பொதுமக்கள் இன்று பயணம் செய்யலாம். மெட்ரோ ரயில் நிறுவன தினத்தையொட்டி கடந்த 3ம் தேதி ரூ.5ல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ‘மிக்ஜாம் புயல், மழையால் ரூ.5-ல் பயணிக்கும் சேவையை பெரும்பாலானோரால் பயன்படுத்த முடியவில்லை,  கட்டண சலுகையை மீண்டும் மக்கள் பயன்படுத்த ஏதுவாக இன்று ரூ.5ல் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். க்யூ ஆர் அட்டை, பேடிஎம், வாட்ஸ் அப், போன் பே ஆகியவை மூலும் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்’ என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 

The post சென்னை மெட்ரோ ரயில்களில் ரூ.5 கட்டணத்தில் பொதுமக்கள் இன்று பயணம் செய்யலாம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Metro Rail ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...